fbpx

JN.1 வகை கொரோனாவுக்கு தடுப்பூசி அவசியமா..? மத்திய அரசு பரபரப்பு அறிக்கை..!!

ஜே.என். 1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஜே.என்.1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, சண்டிகரில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பீகார் விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜே.என் 1 வகை கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜே.என்.1 வகை கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் இந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.

புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மடியில் வைத்து மடிக்கணினி யூஸ் பண்றீங்களா..? அப்படினா இந்த பிரச்சனைகள் உங்களுக்கும் வரும்..!!

Mon Dec 25 , 2023
இன்றைய காலகட்டத்தில் லேப்டாப் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது. இதனால் தற்போது பெரும்பாலானோர் வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்துள்ளது. ஆனால், பலரும் மடிக்கணினியை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். இப்படி செய்வது மிகவும் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இப்படி வேலை செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். குழந்தைகளைப் பெறுவதில் சிரமம் : லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு குழந்தை […]

You May Like