fbpx

தாய்ப்பால் பத்தலையா?… 4 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுப்பது!… இதோ லிஸ்ட்!

4 மாத குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்றால் என்ன உணவுகளை கொடுக்கலாம் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும் போது வேறு என்ன உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை குறித்து பார்ப்போம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறையாக இருந்தாலோ அல்லது குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்காத சூழ்நிலை ஏற்பட்டாலோ சில திட உணவுகளை கொடுக்கலாம். 4 மாதத்தில் குழந்தைகள் வளர தொடங்கிவிடுவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருக்க தொடங்குவார்கள். அதனால் பசி உணர்வு அதிகமாக இருக்கும். சில உணவுகளை கொடுப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மேலும் தாய்ப்பாலைச் ஈடுகட்ட இது சிறந்த முறையாக இருக்கும்.

வாழைப்பழம் இயற்கை தந்த சிறந்த உணவு. வாழைப்பழத்தை கொடுக்கும்போது நன்றாக மசித்து பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது நல்ல சத்து கிடைக்கும். சக்கரவள்ளி கிழங்கு எளிதாக ஜீரணத்தை கொடுக்கக்கூடியது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும். இதனை நன்றாக ஆவி கட்டி வேகவைத்து தாய்ப்பாலுடன் கலந்து கொடுக்கலாம்.கேரட் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய நல்ல உணவு. கேரட்டை தோல் சீவி அதனை மசித்து வேக வைத்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும். அவகோடா பழத்தை குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை துண்டுகளாக்கி அதன் சதையை கூல் போன்று மசித்து பால் சேர்த்துக் கொடுக்கலாம்.

ஆப்பிள் பழத்தை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து அதனை தோல் உரித்து நன்றாக மசித்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆப்பிள் போன்ற சுவையை கொண்டதுதான் பேரிக்காய். இந்த பழத்தையும் குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. குழந்தைகளுக்கு எந்த உணவு கொடுத்தாலும் நான்கு நாட்கள் வரை பொறுத்திருந்து, அதன் பிறகு வேறு உணவை பழக்கவேண்டும். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு உணவை கொடுத்து வர குழந்தைகளுக்கு அது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். குழந்தைகள் அதற்கு பழக்கப்பட்ட பிறகே மற்ற உணவுகளை கொடுக்க வேண்டும். முடிந்தவரை மருத்துவர்களின் ஆலோசனையோடு கொடுப்பது இன்னும் பாதுகாப்பானது.

Kokila

Next Post

உ.பியில் 3 நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 பேர் உயிரிழப்பு...! விசாரணை தீவிரம்...!

Mon Jun 19 , 2023
உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐம்பத்து நான்கு பேர் கடந்த மூன்று நாட்களில் இறந்துள்ளனர், அதைத் தொடர்ந்து லக்னோவிலிருந்து சுகாதாரத் துறையின் குழு இறப்புக்கான காரணத்தை அறிய மருத்துவமனைக்கு வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் நிலவும் வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், பல்லியா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் கூறுகையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு பேர் மட்டுமே வெப்ப […]

You May Like