fbpx

தினசரி சமையலுக்கு ஏற்றதா தேங்காய் எண்ணெய்? அதிலுள்ள கொழுப்பு ஆபத்தா?

தேங்காய் எண்ணெய் தினசரி சமையலுக்கு பயன்படுத்தினால் உடலுக்கு நல்லதா? இல்லை தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலிலிருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு ஆபத்தா?

சுத்தமான தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் ட்ரைகிளிசரைடு வகை கொழுப்பானது எளிதில் உடலால் உட்கிரகிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தேங்காய் எண்ணெய் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமோ என பயப்பட வேண்டியதில்லை. வீட்டிலேயே தேங்காயை ஆட்டி நீங்களே தயாரிக்கும் இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்துச் சமைப்பதோ, பொரிக்கப் பயன்படுத்துவதோ கூடாது. மேலும் வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களும் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். அதே போல ஆயில் புல்லிங் செய்யவும் தேங்காய் எண்ணெயை பன்படுத்தலாம். அது வாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இது உதவும்.

சரும பாதுகாப்பில் தேங்காய் எண்ணெய்:

சமையலை தாண்டி சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், கூந்தலை வறண்டு போகாமல் வைத்திருக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. தினசரி சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பொரியல் போன்றவை செய்யப் பயன்படுத்தலாம். அதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதுதான். எனவே தினசரி சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது குறித்து அச்சப்படத்தேவையில்லை.

Read More: சரிவிகித உணவு ஏன் அவசியம்..? ICMR சொல்வது என்ன?

Rupa

Next Post

போதைப்பொருள் அதிகரிப்பு...! மருந்து விற்பனை கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்ய உத்தரவு...!

Tue May 14 , 2024
மருந்து விற்பனை செய்யும் கடைகளில் அடிக்கடி மருந்து ஆய்வு செய்ய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கூட மது மற்றும் பலவிதமான போதை பொருள்களுக்கு அடிமையாகி தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி பயிலும் இளம் பருவத்தினரும் இளைஞர்களும் போதைக்கு அடிமையாவது நாட்டு நலனுக்கு மட்டுமல்ல அவர்களின் வீட்டையும் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் முழுமையாக சீரழித்து விடும். போதையால் சண்டை சச்சரவு கொலை நடப்பது […]

You May Like