fbpx

இந்த சிகிச்சை செய்தால் மரணம் நிச்சயமா..? இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!! அதிர்ச்சி காரணம்..!!

முடி கொட்டுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞருக்கு தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (30) என்ற இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக காணப்பட்டுள்ளது. எனவே, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் சில நாட்களில் அதிகமாக காணப்பட்டதால் இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்தாண்டு முடி மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத், அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இவருக்கு செப்சிஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை செய்தால் மரணம் நிச்சயமா..? இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!! அதிர்ச்சி காரணம்..!!

நாளடைவில் இந்த காயங்கள் ஆறாமல் அழுகி அதிலுள்ள பாக்டீரியாக்கள் மூலம் நச்சுத்தன்மை உருவாகி அது ரத்தத்தில் கலந்துள்ளது. இதனால், அவரது சிறுநீரகம் செயலிழந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக இவரது மற்ற உடல் உறுப்புகளும் செயலிழக்க தொடங்கி மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த ரஷீத்திற்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

#திண்டுக்கல் :கள்ளக் காதலனுடன் உல்லாசம்.. பெற்ற குழந்தை கிணற்றில் விழுந்து சாவு..!

Sun Dec 4 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் ராஜதுரை என்பவர் தனது மனைவி துர்கா தேவி (வயது 28) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனிடையில், மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்ற 25ம் தேதி […]

You May Like