fbpx

எலான் மஸ்க் புதிய விமான நிலையத்தை உருவாக்கிறாராம்.. எங்கு தெரியுமா..?

உலகப்பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் டெக்சாஸின் ஆஸ்டின் நகருக்கு வெளியே தனது தனியார் விமான நிலையத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எலான் மஸ்க் தற்போது ஒரு புதிய தனியார் விமான நிலையத்திற்கான திட்டங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.. எலான் மஸ்க்கின் புதிய விமான நிலையம் எப்போது வெளியாகும் என்பது குறித்தோ, அது அமைய உள்ள இடம் குறித்தோ, அதிகம் தெரியவில்லை என்றாலும், கருத்தியல் திட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. விமான நிலையம் டெக்சாஸின் பாஸ்ட்ராப் அருகே ஆஸ்டினுக்கு கிழக்கே அமையக்கூடும் என்று கூறப்படுகிறது..

எலான் மஸ்க் ஏன் ஒரு தனியார் விமான நிலையத்தை உருவாக்குகிறார்? ஒரு தனியார் விமான நிலையம் மற்றும் தனக்கும், தனது நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.. குறிப்பாக எலான் மஸ்க்கின் மூன்று நிறுவனங்கள் ஆஸ்டினில் இருப்பதாலும், டெஸ்லாவின் உலகளாவிய தலைமையகத்தை ஆஸ்டினில் இருப்பதாலும் அவர் தனி விமான நிலையத்தை அமைக்க உள்ளதாக தெரிகிறது..

எனினும் விமான நிலையம் கட்டுவது என்பது உடனடி காரியம் அல்ல என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு விமான அதிகார அமைப்புகளின் ஒப்புதல்கள் தேவை.

இதற்கிடையில், டெஸ்லா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 16.9 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது, இது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 18.8 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

12-ம் வகுப்பு முடித்த மாணவர்களின் கவனத்திற்கு... இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மட்டுமே...! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Mon Aug 1 , 2022
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் சாந்திமலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில், பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு, போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் […]

You May Like