பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன. இந்த தாக்குதல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்பட பல உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, விரைவில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கிடையே தான், இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இப்படியான சூழலில் தான், பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால் இந்தியாவுடன் ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் கூறுகையில், ”நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம். இதுதான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.
பஹல்காம் தாக்குதலுக்கும், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமை உள்ளது. இரண்டும் ஒன்றாக உள்ளது. ஆனால், சூழல் மட்டுமே வேறுபட்டுள்ளது. இந்தியாவை போலவே இஸ்ரேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு தான். இந்தியர்களை பயங்கரவாதிகள் குறிவைக்கும் போது, இந்தியாவின் மனநிலை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வானில் வட்டமடிக்கும் இந்தியாவின் சுகோய் Su-30, ரஃபேல் போர் விமானங்கள்..!! மரண பீதியில் பாகிஸ்தான்..!!