சென்னை கண்ணகி நகரில் “நட்புடன் உங்களோடு” போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் போதைக்கு அடிமையாகி இந்த மையத்தின் வாயிலாக அதில் இருந்து விடுபட்டு, அவர்களுக்கு வேறு விதமான உடல்நல பாதிப்புகள் இல்லாத பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் தேசிய நலவாழ்வு குடும்பம் சார்பில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும்.
குறிப்பாக அரசின் தற்காலிக பணியிடங்களை நிரப்பும்போது போதையில் இருந்து விடுபட்ட கண்ணகி நகர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களுக்கு பணம் கொடுத்தால் சில நாட்கள் தான் இருக்கும். ஆனால் தற்காலிக வேலை வாய்ப்பு வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.