fbpx

முதல் வாரமே குறும்படமா..? விசித்ராவை பயங்கரமாக திட்டிய ஜோவிகா..!! சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார், வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து வருவதால் அடிக்கடி போட்டியாளர்களுக்கு இடையே மோதல், கலவரம் வெடித்து வருகிறது. இன்றைய தினம் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய நாளுக்கான 3-வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், விசித்திரா தன்னை 12-வது படித்து முடித்தே ஆக வேண்டும் என்று என்னைத் தான் சொன்னாரு என்று ஜோவிகா சொல்ல, விசித்திராவோ உன்னோட அம்மா சொன்னால் கேட்கமாட்டியா என்று கேட்க, என்னைப் பற்றி மட்டும் பேசுங்க என் குடும்பத்தைப் பற்றி பேசாதீங்க என்று சொல்லி விட்டு கோபமாக செல்கிறார் ஜோவிகா.

Chella

Next Post

அஷ்டம சனியால் சிக்கித் தவிக்கும் விஜய், அஜித்..!! அட அண்ணாமலையுமா..? எச்சரிக்கும் பிரபல ஜோதிடர்..!!

Fri Oct 6 , 2023
பொதுவாக ஏழரை சனியை விட அஷ்டமத்து சனி நிறைய கஷ்டங்களைத் தரும். கோச்சார ரீதியாக சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதுதான் அஷ்டமத்து சனி. கடக ராசிக்காரர்களுக்கு தற்போது 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறது சனி பகவான். எனவே, கடக ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனி காலம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ராசி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம். சிம்ம லக்னம். அவர் கடந்த ஓராண்டு காலமாகவே […]

You May Like