கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மாருதி ராதோடு. இவருக்கும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் நெருக்கமாக காதலித்து வந்துள்ளனர். பென்டெலா வெர்மா எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், டிக்-டாக் போன்ற செயலிகளில், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாருதி ராதோடுக்கு தெரியவந்தது. இதனால், கோபடைந்த அவர் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் இருந்து அந்த பெண்ணை, அவர் தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்ணும், அவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போதும் இன்ஸ்டா போன்ற செயலியில் வீடியோ எடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மாருதி ராதோடு, பென்டெலா வெர்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக அவரது உடலை விளைநிலத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
பின்னர், அவரும் தற்கொலைக்கு முயன்றார். அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் மாருதி ராதோடை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மாருதி ரதோடு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.