fbpx

பதவிக்கு லஞ்சமா..? எச்சரித்த விஜய்..!! வெளியேற்றப்பட்ட புஸ்ஸி ஆனந்த்..!! தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசித்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிவிட்டு, கட்சிப் பொறுப்பாளர்களை ஒவ்வொருவராக அழைத்து பேசி வருகிறார் விஜய். அவர்களிடம் கட்சியின் கட்டமைப்பு, மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்சனைகள், புதிய நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகள் நியமனத்திற்கு பணம் வசூலிக்கப்படுகிறதா..? என்பன உள்ளிட்ட விஷயங்களை ஆலோசித்து வருகிறார்.

விஜய் கடும் எச்சரிக்கை

மேலும், புதிய நிர்வாகிகளை நியமிக்க மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. அதுபோன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சியின் பதவி பறிக்கப்படும் என்றும் விஜய் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கட்சியின் பதவி பெற ரூ.15 லட்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விஜய் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ஆரோக்கியசாமி தான் காரணம்..?

இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டதற்கு தவெக தேர்தல் வியூக பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தான் காரணம் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோவில், புஸ்ஸி ஆனந்த் இருக்கும்போது விஜய்யிடம் என்ன பேசினாலும் அது கசிந்துவிடுவதாக கூறியிருந்தார்.

Read More : “அனாதை நிலையில் சுற்றிக் கொண்டிருப்பவர் அடுத்த முதலமைச்சரா”..? “கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சி அதிகாரமா”..? விஜய்யை விளாசிய CM..!!

English Summary

Vijay has issued this warning amid allegations that he is demanding Rs. 15 lakh to get a party position.

Chella

Next Post

குளிர் சாதனை பெட்டியில் எந்தெந்த காய்கறிகளை எந்த இடத்தில் வைக்க வேண்டும்..?

Fri Jan 24 , 2025
Which vegetables should be placed where in the fridge?

You May Like