fbpx

கமல் பலவந்தமா லிப்லாக் அடிச்சது மட்டும் கரெக்டா..? கழுவி ஊற்றிய யுகேந்திரனின் மனைவி..!!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் துவக்கம் முதலே போட்டியாளர் பிரதீப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சக போட்டியாளர்களிடம் ஏகத்திற்கும் வம்பிழுத்து, பல விஷயங்களில் சிக்கி வந்தார். இவரது செயல்பாடுகள் பல சமயங்களில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. இந்நிலையில், இவருக்கு ரெட் கொடுத்த கமல்ஹாசன் இவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

முன்னதாக இவரை எலிமினேட் செய்வது குறித்து சக போட்டியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், அதிகமானவர்கள் பிரதீப்பிற்கு எதிராகவே ரெட் கார்ட் கொடுத்தனர். பெண்களுக்கு இவரால் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதே காரணத்தை குறிப்பிட்டு கமல்ஹாசனும் பிரதீப்பிறகு ரெட் கொடுத்து எலிமினேட் செய்துள்ளார்.

இந்நிலையில் கமலின் இந்த செயல்பாடு பல்வேறு தரப்பினரிடையேயும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து கடந்த வாரத்தில் எலிமினேட் ஆன யுகேந்திரனின் மனைவி மாலினி இந்த விவகாரத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். பெண்களை காரணம் காட்டி இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரதீப்பை வெளியேற்றியுள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக புன்னகை மன்னன் படத்தில் நடித்த 16 வயதான நடிகை ரேகாவிற்கு தெரியாமல் கமல்ஹாசன் லிப் கிஸ் செய்ததாக பரவலாக பேசப்படுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கமல் நடித்த முக்கால்வாசி படங்களில் லிப்லாக் இல்லாமல் இருக்காது என்றும் தெரிவித்துள்ள யுகேந்திரனின் மனைவி மாலினி, பெண்களுக்காக பெண்கள் உரிமைக்காக கமல் பேசுவதாக கூறுவது தனக்கு புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் இதையெல்லாம் அரசியல் நோக்கத்தோடு தான் பேசி வருவதாகவும் மாலினி குற்றம்சாட்டியுள்ளார்.

Chella

Next Post

சித்தப்பா மகனுடன் கள்ளத்தொடர்பு..!! கண்டித்த கணவரை முந்திரி தோப்புக்குள் கொன்று எரித்த மனைவி..!!

Mon Nov 6 , 2023
அரியலூர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த வாரம் மனித உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருப்பதை கண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சடலம் என்றும், கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்ததும் […]

You May Like