கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பெருமைக்காக குரல் கொடுத்த போதிலும், அதன் பாதுகாப்புக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க திமுக தவறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.
பாரதியார் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்த சீனி விஸ்வநாதனுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி., நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, சீனி விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பாரதியார் அகண்ட பாரதத்தை பற்றி பேசியுள்ளார். ஆனால், இங்குள்ள சக்திகள் நாட்டை பிரிக்க நினைக்கின்றனர். 60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழருக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எதுவும் செய்யவில்லை. திமுக உறுதியான நடவடிக்கையாக மாற்றமடையத் தவறும் வெற்று வாய்வீச்சில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
தமிழ் மீதான உண்மையான மரியாதை அதன் வளமான இலக்கிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் உள்ளது. பாரதியாரின் கொள்கைகளை நிலைநிறுத்த கூட்டுப் பொறுப்பை சமூகம் ஏற்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் சக்தியாக அவரது பங்களிப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பெருமைக்காக குரல் கொடுத்த போதிலும், அதன் பாதுகாப்புக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கத் தவறியதாக” ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More : சேலத்தில் அதிர்ச்சி..!! பெற்ற 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தந்தை..!! மனைவி, மற்றொரு குழந்தை கவலைக்கிடம்..!!