fbpx

”அனுமதியோடு உறவு வைத்துக்கொண்டு நான் ஏமாந்துட்டேன்னு சொல்றது நியாயமா”..? வெளுத்து வாங்கிய கஸ்தூரி..!!

3 வருடம் குடும்பம் நடத்தி விட்டு, உறவும் வைத்துக் கொண்டு, அந்த உறவில் நான் ஏமாந்து விட்டேன் என்று சொல்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று விஜயலட்சுமி குறித்து நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கு இடையே நடந்த பிரச்சனை குறித்து நடிகை கஸ்தூரி பேசியிருக்கிறார். அதில், ”ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே ஒரு பிரிவு வருகிறது. அதை அப்படியே திருப்பி போட்டு பாருங்கள். எத்தனை ஆண்களை பெண்கள் காதலிக்கிறார்கள். இறுதிக்கட்டத்தில் வீட்டில் சம்மதிக்கவில்லை என்பதற்காக அந்த ஆணை அப்படியே விட்டு செல்கிறார்கள்.

இன்னும் சில இடங்களில், ஆண்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கையை கொடுத்துவிட்டு, எத்தனையோ நாட்கள் எத்தனையோ மாதங்கள் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு பிரிந்து செல்கிறார்கள். காதலிக்கும்போது நன்றாக காதலித்து விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த காதலில் முறிவு ஏற்படும் போது, அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி காவல்நிலையத்தின் படியேறுவதற்கு சட்டத்தில் இடமில்லை.

அதே நேரம், அந்த உறவில் நீங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானாலோ அல்லது திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறான் என்றாலோ நீங்கள் அது குறித்து புகார் அளிக்கலாம். சீமான் விஷயத்தில், 3 வருடம் குடும்பம் நடத்தி விட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் அனுமதியோடு உறவு வைத்துக் கொண்டு, அந்த உறவில் நான் ஏமாந்து விட்டேன் என்று சொல்வதற்கு சட்டத்தில் இடமில்லை.

எனக்கு விஜி-மாவை (விஜயலட்சுமி) மிகவும் பிடிக்கும். அவர் தற்கொலை முயற்சி செய்யும்பொழுது முதலில் நான் தான் அவருடன் இருந்தேன். அவளுக்கு நான் நிறையவே செய்திருக்கிறேன். தற்போது, நான் கொடுக்கும் இந்த நேர்காணலை பார்த்து அவர் என்னை திட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் எனக்கு கூட ஒரு வீடியோ வெளியிட வாய்ப்பு இருக்கிறது. சினிமா மற்றும் சீரியலில் நடிக்க அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதை தவிர்த்து விட்டு அவர் தினமும் தன்னுடைய பர்சனல் பக்கத்தை பற்றி பேசிக்கொண்டு இருப்பது அவர் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது போல் உள்ளது.

இந்த விஷயத்தில் அவர் நீதி கேட்டோ, பெண்ணுரிமை பக்கம் நின்றோ கேள்வி கேட்டது போல எனக்கு தெரியவில்லை. அவர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு சீமான் என்னை ஏமாற்றிவிட்டார் என்பதுதான். உண்மையில் சீமான் ஏமாற்றி இருக்கிறாரா? என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும். அப்படியே ஒருவர் மிகப்பெரிய குற்றம் செய்திருந்தாலும் கூட அதை 10 வருடங்கள் கழித்து தூசி தட்டுவது என்பது, இந்த அரசு எப்படியாவது சீமானை கைது செய்ய லட்சுமியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. என்னை பொறுத்தவரை இது ஒரு பழிவாங்கும் முயற்சி. லட்சுமி பொருளாதார உதவியை நாம் தமிழர் கட்சி சார்பிலும், என்னிடமும் பெற்று இருக்கிறார்” என்று பேசினார்.

Chella

Next Post

10 ரூபாய் வரை குறையும் பெட்ரோல், டீசல்..? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

Wed Sep 13 , 2023
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் […]

You May Like