fbpx

நிச்சயதார்த்த விழாவில் பச்செக்கென லிப் கிஸ்!… வைரலாகும் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா வீடியோ!

நிச்சியதார்த்த விழாவில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி” படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இப்படியொரு நிலையில் ரோபோ சங்கருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் செய்ய போவதாக அவரே கூறி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாமன் கார்த்திக் உடன் நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

இப்படியொரு நிலையில், தற்போது இந்திரஜா தன்னுடைய வருங்கால கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த காணொளி வைரலாகி வருகின்றது. சொந்தங்கள் கூடியிருக்க இந்திரஜா இப்படி நடந்து கொள்வது அவருடைய மாமா மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பதனை உணர்த்தியுள்ளது. இவர்கள் இருவரின் அவசரத்தை பார்த்த பலரும் நிச்சயதார்த்தத்துக்கு பதில் திருமணமே செய்து வைத்திருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Kokila

Next Post

தூள்...! அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ரூ.75,000 நிதியுதவி...! தமிழக அரசு அறிவிப்பு...!

Tue Feb 6 , 2024
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், பட்டயப்படிப்பிற்கு ரூ.2500/-ம் […]

You May Like