fbpx

இது கும்பாபிஷேகமா? தீபாவளியா?… ரூ.500 கோடிக்கு விற்பனையான சிவகாசி பட்டாசு!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிவகாசி உட்பட இந்தியா முழுவதும் ரூ.500 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த 2020 ஆகஸ்ட் முதல் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இன்று நடைபெறவுள்ள இந்த ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள இந்திய மக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிவகாசி உட்பட இந்தியா முழுவதும் 500 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், ஆண்டுதோறும் ஜனவரி 22-ம் தேதியை இந்திய தேசத்தின் தேசிய திருவிழா நாளாக அறிவித்து, தீபாவளி போல ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Kokila

Next Post

தடையில்லையேல்!... உடனே உங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்!… தமிழக அமைச்சரை அலறவிட்ட நிர்மலா சீதாராமன்!

Mon Jan 22 , 2024
காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நேரடி நிகழ்ச்சிகளை திறந்த வெளி மைதானத்தில் ஒளிபரப்ப போலீசார் தடை விதித்துள்ளதாக பா.ஜ., பிரமுகர்கள் கூறியுள்ளனர். இது போன்ற தடைகளை போடும் மாநில அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அயோத்தி கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எஸ்.எம்.ஜி. சூர்யா […]

You May Like