fbpx

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவது பாதுகாப்பானதா..? பெற்றோர்களே இந்த தவறையெல்லாம் செய்யாதீங்க..!!

நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் பலருக்கும் டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் என்பதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது சரிதானா? என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது. குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதில் உள்ள பாதக விஷயங்களையும் தவிர்க்க முடியாதவர்களுக்கான பயன்படுத்தும் முறைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது. சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எரிச்சல் காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கும். டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நறுமணத்துக்காகவும் சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். கால் இடுக்குகளில் அலர்ஜி ஏற்படுவதற்கு முக்கியக் காரணமே இதுதான்.

டயப்பரை 4 மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இல்லையென்றால், எளிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி விடுவார்கள். இந்தக் கிருமித்தொற்றைத் தடுக்க, சில டயப்பர்களில், ஆன்டிசெப்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம்பார்த்துவிடும். 24 மணி நேரமும், டயப்பரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும், சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்த தெரியாது.

டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது ஆகிய தவறுகளை செய்வார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இந்தப் பிரச்சனைகளால், குழந்தைகள் பள்ளியில், பொது இடங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாவதால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

டயப்பர் பயன்படுத்தும் முறை :

டயப்பர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது. அப்படி தவிக்க முடியாமல் பயன்படுத்துபவர்கள் கீழ்காணும் சிலவற்றை அவசியம் பின்பற்றுவது நல்லது.

* குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம்.

* டாய்லெட்களைப் பயன்படுத்த குழந்தைகளை 2 வயதில் இருந்தே பழக்கபடுத்துவது சிறந்தது.

* குழந்தைகளுக்கு ஒருநாள் முழுவதும் டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, இரவில் மட்டும் டயப்பரைப் பயன்படுத்தலாம்.

* குழந்தையை வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்த வேண்டும்.

* ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று மீண்டும் அதே டயப்பரை பயன்படுத்தக் கூடாது.

Read More : இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே முந்துங்கள்..!!

English Summary

It is best to avoid using diapers. Those who cannot afford to use them should follow certain guidelines.

Chella

Next Post

50% மானியத்தில் ஆடு, கோழி, பன்றி பண்ணை அமைக்கலாம்..!! ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

Sat Nov 23 , 2024
A 50% subsidy is provided for setting up a poultry, goat or sheep, pig farm and for the storage and preservation of fodder and fodder crops.

You May Like