fbpx

ரஸ்க் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?… என்னென்ன பக்கவிளைவுகள் தெரியுமா?

அடிக்கடி தேநீருடன் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர் தேநீருடன் எதாவது ஒரு நொறுக்கு தீனியை உண்பதை விரும்புவதுண்டு. அந்த வகையில்,நம்மில் பெரும்பாலானோர் ரஸ்க்கை தேநீரில் தொட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் தான். இந்த சிற்றுண்டி பாதிப்பில்லாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், இந்த பாதிப்பில்லாத சிற்றுண்டியை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், இந்த ரசிகை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவை கலோரிகள் நிறைந்தவை. ஒரு ரஸ்கில் 40-60 கலோரிகள் வரை இருக்கலாம். எனவே இதனை தொடர்ந்து உட்கொண்டால் நமது உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்.நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்கள், ரஸ்க்கை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ரஸ்க் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது.

அதாவது அந்த உணவில் நார்ச்சத்து இருக்காது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம், இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். ரஸ்க் பிஸ்கட்களில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக இருப்பதால் பசி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கலாம், வாயு பிரச்னை, மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் புண்களை ஏற்படுத்தும்.

Kokila

Next Post

திங்கள் கிழமை வந்தால் இனி ஜாக்கிரதையாக இருங்கள்!… மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!... ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Tue Jun 13 , 2023
10,528 நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வு செய்ததில், வேலை வாரத்தின் தொடக்கத்தில் மிக மோசமான மாரடைப்பு ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மிகக் கடுமையான மாரடைப்பு திங்கள் கிழமையில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் (Belfast Health and Social Care Trust) மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களின் (the Royal College of […]

You May Like