இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யாவின் கணவர் தருண், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தருணை அவர் மறுமணம் செய்துகொண்டுள்ளார். ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் தன்னுடைய மகளின் திருமணத்தையும் மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இந்த திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சீயான் விக்ரம், கமல்ஹாசன், ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, பிரியா பவானி சங்கர், சுஹாசினி இயக்குனர்கள் மணிரத்னம், அட்லீ மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல் இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் கலந்துகொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் பட விழாக்கள் உள்பட சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வந்த சங்கீதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார். அவருடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா ஹாரிஸ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய்யால் பங்கேற்க முடியவில்லை. ஏனெனில், அவர் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருப்பதால் அவருக்கு பதில் அவரது மனைவி கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சங்கீதாவின் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
Read More : ரூ.84,000 கோடி சொத்து..!! ஆடம்பர பங்களா..!! யார் இந்த பணக்கார பெண்..? வியப்பூட்டும் தகவல்கள்..!!