fbpx

விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதாவின் வேதா இல்லம்..? ஜெ.தீபா சொன்ன ஷாக் தகவல்..!

போயஸ் தோட்ட இல்லத்திற்கு விரைவில் குடியேற இருப்பதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ”போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம் என்றும் அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த வீட்டில் ஜெயலலிதாவும், தனது தந்தையான ஜெயராமனும் வாழ்ந்து வந்ததையும், அந்த வீட்டில்தான் தான் பிறந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார். தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் அந்த வீடு தங்களுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார்.

விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதாவின் வேதா இல்லம்..? ஜெ.தீபா சொன்ன ஷாக் தகவல்..!

ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்ததால் அவருக்கு உதவி செய்ய பல பேர் தேவைப்பட்டதாகவும், அவருடன் இருந்து உதவி செய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய சட்டப்போராட்டத்துக்கு பின் வேதா நிலையம் தங்கள் வசம் வந்துள்ளதாகவும், அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதாகவும் தீபா தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் போயஸ் தோட்ட இல்லத்தில் குடியேற உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், வேதா நிலையம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Chella

Next Post

கனமழை எதிரொலி.. இன்று பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

Tue Sep 6 , 2022
கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்கள் கனமழை தொடர்ந்து வருகிறது.. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழை காரணமாக நேற்று பெங்களூரு வெள்ளக்காடாக காட்சியளித்தது.. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் டிராக்டர்கள் மற்றும் படகுகளின் உதவியுடன் போக்குவரத்தை […]

You May Like