fbpx

படிப்பு குறித்து ஜோவிகா பேசியது சரியா..? அதில் உள்ள பிரச்சனைகள் என்ன தெரியுமா..?

அம்மா ஸ்தானத்தில் அட்வைஸ் பண்றேன்னு தேவையில்லாமல் வனிதா பொண்ணு கிட்ட வாய் கொடுத்த விசித்ராவுக்கு நீயெல்லாம் என்னை பத்தி பேசாத விச்சு என நீ வா போ என்கிற அளவுக்கு விளாசி எடுத்து விட்டார் ஜோவிகா. இவரின் படிப்பு குறித்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் வேதனை என்னவென்றால், வீட்டிலிருந்தவர்களும் ஜோவிகாவின் பேச்சை தவறென்று சொல்லவில்லை. அனைவருமே கைத்தட்டுகிறார்கள். இணையவாசிகள் சிலரும் கூட.

நேற்றைய போட்டியில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து Basic Manners-ஐயும் படிப்பையும் குழப்பிக்கொண்டு விட்டார்கள். கல்வி, Manners மட்டுமே சொல்லித்தராது. இந்த குழப்பத்தினால், ஜோவிகா பேச்சில் அடிப்படையிலேயே பல சிக்கல்கள் உள்ளன. படிப்பே வேண்டாம், டிகிரியே வேண்டாமென்கிற தொனியில் ஒரு கருத்தை பல கோடி பேர் இருக்கும் இடத்தில் ஜோவிகா போன்ற குழந்தையும், முதிர்ந்த மூத்த இலக்கியவாதியான பவா செல்லதுரை சொல்வது, நிச்சயம் ஏற்புடையதல்ல.

‘அப்போ, படிக்காமல் சாதனை செய்தவர்களும், நிம்மதியான வாழ்வை பெற்றவர்களும் இல்லவே இல்லையா’ என கேட்கிறீர்கள். இருக்கின்றனர். அவர்கள் 100 பேர் என்றால், அது கிடைக்காமல் வாழ்வை தொலைத்தவர்களும், அன்றாட வாழ்க்கைக்கும் வேலைக்கும் போராடுபவர்கள் லட்சம் பேர் இருக்கின்றனர். படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் விஷயம்..! இங்கு இப்போதுள்ள பள்ளிக்கல்விமுறை எனக்கு பிடிக்கவில்லை / ஏற்கமுடியவில்லை / சிக்கல் உள்ளது என்றாலும்கூட, அதற்கு மாற்றுக்கல்விகள் பெறும் சூழல்களும் இங்கு உள்ளன. அதைப் பெறலாம்.

ஆனால், பெற்றோரின் வேலையையே செய்கிறேன். எனக்கு அதுதான் வருகிறது என குழந்தைகளை அதை நோக்கி செலுத்துவது, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம்மை பின்னோக்கி அழைத்துச்சென்று குலக்கல்வியில் கொண்டு நிறுத்தும். அதிலும் சோசியல் மீடியாவில் பலரின் ரோல் மாடலாக இருக்கும் பவாவே PHD படிப்பில் இல்லாத புகழ் வெளிச்சம் உனக்கு இருக்கும்மா என அதை மேலும் ஊக்கப்படுத்துவது அபத்தக்குவியல்.

படிப்பு வராத குழந்தைகளுக்காக, அவர்களின் Representation-ஆக நிற்கிறேன் என்றார் ஜோவிகா..! ஒருவேளை உங்களுக்கு இந்த கல்விமுறையில் சிக்கல் இருந்தால், அதை எப்படி மாற்றுவது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்வது அல்லது சீரமைப்பது என்றுதான் உங்களின் பார்வையையும் கவனத்தையும் பேச்சையும் செலுத்த வேண்டுமே தவிர, அதுவே எனக்கு வேண்டாமென சொல்வது சரியல்ல.

படிப்பதற்கு சிரமப்படும் குழந்தைகளுக்கு கூட சிறப்பு பள்ளிகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். படிப்பதற்கு சிரமப்படும் சிறப்புக் குழந்தைகளின் Representation-ஆக ஜோவிகா நிற்கிறாரா அல்லது வசதி வாய்ப்புகள் இருப்பதால், மீடியா புகழ் வெளிச்சம் இருப்பதால் படிக்க வேண்டாம் என கூலாக இருக்கும் Privileged சிறார்களின் Representation-ஆக நிற்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்த உலகம், நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்ள முடியாதது, கல்வியையும் படிப்பையும் அறிவையும் மட்டும்தான். படிக்காத மேதை என இவர்கள் புகழும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராசர்கூட, பிள்ளைகளுக்கு படிப்பைக் கொடுக்கத்தான் நினைத்தாரே தவிர, படிக்காவிட்டால் என்னைப்போல ஆகலாம் என சொல்லவேயில்லை.

அவ்வளவு ஏன், கமல்ஹாசனே கூட நிறைய இடங்களில், “நான் 7-வது தான் படித்திருக்கிறேன். அதற்காக சரியாக படிக்காவிட்டால் கமல்போல் ஆகிவிடலாம் என நினைக்காதீர்கள். அது சரியல்ல. நான் ஒருவேளை படித்திருந்தால், வாழ்க்கையில் நான் சிரமப்பட்டு கற்றுக்கொண்ட பல விஷயங்களை எளிமையாக கற்றிருப்பேன்” என்றார். அதனால மக்களே… படிப்பு முக்கியம்..!

Chella

Next Post

’என்னது 4 சக்கர வாகனமா’..? ’அப்படினா கண்டுபிடிச்சி தாங்க’..!! உரிமைத்தொகை விவகாரத்தில் செக் வைத்த தம்பதி..!!

Sat Oct 7 , 2023
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராம‌மூர்த்தி. இவரது மனைவி ஷீலா, தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரிடம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாகவும், அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் ராம‌மூர்த்தி, கடந்த 25ஆம் தேதி உரிமைத்தொகை வழங்காததற்கு காரணம் நான்கு சக்கர வாகனம் இருப்பதாக கூறியதால், தங்கள் நான்கு […]

You May Like