fbpx

ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மாவா..? அட அவரு இல்லையாமே..!! அப்படினா வேற யாரு..?

பலரும் நக்மா, ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி என்றே இன்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்ஸை தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறார். வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். ஜோதிகா தமிழ் சினிமாவில் அறிமுகமான சமயம் அவரது சகோதரி நக்மா தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

ஜோதிகா, நக்மா சகோதரிகள் இருவருமே தமிழ் சினிமாவில் டாப் பிரபல நடிகையாக இருந்தவர்கள். பலரும் நக்மா, ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி என்றே இன்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நடிகை நக்மா ஜோதிகாவின் ஒன்று விட்ட சகோதரி தானே தவிர உடன்பிறந்த சகோதரி கிடையாது. மேலும், . ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி யார் தெரியுமா?

1998ஆம் ஆண்டு அருண் விஜய், குஷ்பு நடிப்பில் உருவான துள்ளித்திரிந்த காலம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி ரோஷினி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் மொத்தம் 6 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். இதனால் நடிகை ரோஷினி பற்றி ரசிகர்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பார்ப்பதற்கு ஜோதிகாவை போலவே இருக்கும் ரோஷினியின் புகைப்படம் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Read More : இந்தியாவில் இப்படி ஒரு நகரம் இருக்கா..? அசைவ உணவிற்கு முற்றிலும் தடை..!! எங்கு தெரியுமா..?

English Summary

Many still think that Nagma is Jyothika’s younger sister. But that is not the truth.

Chella

Next Post

மத்திய பிரதேசம் : Magic Voice App-யை பயன்படுத்தி கல்லூரி மாணவிகள் 7 பேர் பலாத்காரம்..!

Sat May 25 , 2024
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் 7 கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் மேஜிக் வாய்ஸ் செயலி மூலம் தங்கள் குரலை மாற்றி, தங்கள் ஆசிரியராக நடித்து சிறுமிகளை அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பில் இருந்து குரல் மாற்றும் பயன்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்ற குற்றவாளி பிரஜாபதி தனது உதவியாளர்களுடன் சேர்ந்து குரல் […]

You May Like