மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மம்முட்டி. மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளது. தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். 3 தேசிய விருதுகள், கேரள மாநில அரசின் விருதுகள் என பல விருதுகளை அவர் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் மம்முட்டியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதால், அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவரின் PRO இந்த கூற்றுகளை மறுத்துள்ளார்.
ரம்ஜான் விடுமுறையில் இருக்கும் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அவரின் PR டீம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “இது போலி செய்தி. அவர் ரம்ஜானுக்கு உண்ணாவிரதம் இருப்பதால் விடுமுறையில் இருக்கிறார். அதனால்தான் அவர் தனது படப்பிடிப்பு அட்டவணையிலிருந்தும் ஓய்வு எடுத்துள்ளார். உண்மையில், இடைவேளைக்குப் பிறகு, அவர் மோகன்லாலுடன் மகேஷ் நாராயணனின் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மம்முட்டி கடைசியாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தில் நடித்திருந்தார். இது ஜனவரி 23 அன்று வெளியிடப்பட்டது. எனினும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தது. ஆனால் இந்த படத்தில் மம்முட்டியின் நடிப்புக்கு பரவலான பாராட்டு கிடைத்தது.
மம்முட்டிவின் அடுத்த படமான பசூகா ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. இது ஒரு அதிரடி-திரில்லர் படம், பாபு ஆண்டனி, ஐஸ்வர்யா மேனன், நீதா பிள்ளை மற்றும் காயத்ரி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதே போல் மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் மகேஷ் நாராயணன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியது. இந்த மல்டி ஸ்டார் படத்தில் மலையாள திரையுலகின் இரண்டு பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்றாக நடிக்க உள்ளனர்.. தற்காலிகமாக MMMN (மம்முட்டி, மோகன்லால், மகேஷ் நாராயணன்) என்று பெயரிடப்பட்டுள்ள இதில், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : 14 ஆண்டுகளாக ஒரு படம் கூட நடிக்கல.. ஆனா சல்மான், ஹ்ருத்திக் ரோஷனை விட அதிக சொத்து.. இந்த 90’s நடிகை யார்..?