fbpx

கைதாகிறாரா அமைச்சர் பொன்முடி..? நவ.30ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு..!!

சட்டவிரோத பணப்பரிவத்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். திமுக அமைச்சர்களை குறிவைத்து, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது.

அதன்படி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கடந்த மாதம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் பொன்முடியை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி அனுப்பினர். இந்நிலையில், நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல், முன்னதாக திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

'விஜய் கூட இருக்கும்போது 3 மாதம் கர்ப்பம்’..!! ’அவருக்காக தான் இதை பண்ணேன்’..!! மாளவிகா அதிர்ச்சி தகவல்..!!

Fri Nov 24 , 2023
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன். இந்த படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இரு குழந்தைகளை பெற்றுக்கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து, மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த மாளவிகா, கோல் படத்தின் […]

You May Like