fbpx

ஜாமீனில் வெளிவருகிறாரா அமைச்சர் செந்தில் பாலாஜி..? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில் அவரது நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறை செய்தார். இந்த மனு மீதான விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

வீட்டு வாசலில் தெளிக்கப்பட்ட ரத்தம்..!! அதிகாலையில் கோலம் போட வந்த பெண்கள் கதறல்..!! விருதுநகரில் மர்மம்..!!

Mon Nov 6 , 2023
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகராட்சிக்குட்பட்ட உச்சி சுவாமி கோயில் 4-வது குறுக்குத் தெரு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. மழையால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதையடுத்து, இரவு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டனர். பின்னர், அதிகாலையில் பெண்கள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டு வாசலை பார்த்து […]

You May Like