fbpx

Lok Sabha தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறாரா நிர்மலா சீதாராமன்..? பாஜக வெளியிட்ட அறிவிப்பு..!!

வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.

Lok Sabha | பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முக்கியத் துறைகளை வகிப்பவர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர். இவர்கள் முறையே நிதித்துறை, வெளியுறவுத் துறையை நிர்வகித்து வருகின்றனர். இதில் நிர்மலா சீதாராமன் கர்நாடகத்தில் இருந்தும், எஸ்.ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள். இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இவர்கள் இருவரும் நேரடியாக போட்டியிடுவார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், அவர்கள் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார். நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் தமிழர்கள் என்பதால் இவர்களில் ஒருவர் தமிழ்நாடு அல்லது புதுச்சேரியில் போட்டியிடக்கூடும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

English Summary : BJP‘s Nirmala Sitharaman, Jaishankar likely to contest from Karnataka, says Pralhad Joshi

Read More : Ration | குடும்ப உறுப்பினர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கைரேகை வைக்க முடியுமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Chella

Next Post

’Rajya Sabha சீட் தர முடியாது’..!! உறுதியாக நிற்கும் அதிமுக..!! கூட்டணி தாவுகிறதா தேமுதிக..?

Tue Feb 27 , 2024
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி வழங்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்காக கூட்டணி குறித்து அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன் அதிமுக […]

You May Like