fbpx

பொன்னியின் செல்வன் கதை , கதாப்பாத்திரங்களுடன் பொருந்தி உள்ளதா ?

ஏற்கனவே ஏராளமான புத்தக ரசிகர்கள், கல்கியின் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் கதையாக படித்து மகிழ்ந்துள்ளார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு படத்தில் இடம்பிடித்துள்ளார்களா என்பதை பார்ப்போம்..

கல்கியின் பொன்னியின் செல்வன் கதை ரசிகர்களுக்கு பரிட்சயம் . கதை தெரிந்ததுதான் இருந்தாலும் திரையில் தோன்றும் காட்சிகளாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. படம் வெளியானதும் திரை அரங்குகள் அனைத்தும் ’’ஹவுஸ் புல் ’’  ஆனது. பார்த்த ரசிர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

அருள்மொழி வர்மனாக – ஜெயம் ரவி,ஆதித்த கரிகாலனாக – விக்ரம் , குந்தவையாக – திரிஷா, நந்தினியாக – ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டையராக – சரத்குமார் , சின்ன பழுவேட்டையராக பார்த்திபன், வந்தியத்தேவனாக – கார்த்தி உள்பட இன்னும் பல நடிகர்களும் நடித்திருந்தனர்.

ஆதித்த கரிகாலன் அறிமுகமாகும் காட்சியிலேயே மாஸ் கைத்தட்டலையும் , விசில் சத்தத்திலும் நிறைந்தது திரையரங்கம் . அந்த கதாப்பாத்திரத்தில் வேறு யாராலும் இப்படி நடித்திருப்பார்களா என்ற அளவுக்கு நம்மை சிந்திக்க வைத்திருந்தது.

வந்தியத்வேன் அறிமுகக் காட்சியும் அவர் கரிகாலன் கூறியதால் பழையாறுக்கு செல்லும் காட்சிகளும் அதனிடையே வரும் வசனங்களும் கைதட்டல்களை அள்ளியது. வந்தியத்தேவன் கதாபாத்திரமும் மிக அற்புதமாக அவருக்காகவே கிடைக்கப்பெற்ற பாத்திரம் எனக் கூறலாம்…


குந்தவையாக திரிஷா ஒற்றன் என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் வந்தியதேவனை விடவும், சோழ அரசின் நம்பிக்கைக்குரிய ஒற்றன் முன்குடுமி வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் நம்பி, பல தகவல்களை மக்களோடு மக்களாகப் பயணித்து திரட்டுவதும், தான் ஒரு ஒற்றன் என்பதை நந்தினியிடமே அப்பட்டமாக வந்தியதேவன் கூறுவது போல அல்லாமல், அப்பிராணி போல வந்தியதேவனிடம் அடிவாங்குவதிலும் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை அடித்துக்கொள்ள ஆளேயில்லை. தலை பத்திரம் என்று வந்தியதேவனை எச்சரிக்கும் அந்த நொடி சிரிப்பலைதான்.

படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக சுழன்று சுழன்று காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. காட்சிப்படுத்தப்பட்ட கோட்டைகள் எதுவும் வெறும் பிரமாண்டத்துக்காக மட்டும் மிகைப்படுத்தப்படாமல், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததும், பொன்னியின் செல்வன் நாவலைப் படித்த ரசிகர்களின் கற்பனை என்ற குதிரையில் படம் ஏறி அமர வசதியாகவே இருந்தது. பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள், 292 அத்தியாயங்கள். பல நூறுகளில் பக்கங்கள்.

இதனை ஒரு திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் திரைப்படத்துக்குள் கதையை சுருக்க வேண்டும் என்பது படக்குழுவுக்கு மிகப்பெரிய சவால். பல இடங்களில் படம் கட்-ஷாட் செய்யப்பட்டிருப்பதை உணர முடிந்தாலும், அதனை திரைப்படத்துக்குள் அடக்கியிருப்பதே மிகச் சிறப்புதான்.

முழு படத்திலும் நிறைந்திருப்பவர், இவருக்கு எழுதப்பட்ட வசனங்கள் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. அதுவும் குந்தவையுடனான வசனங்களை விடவும் நந்தினியின் இரண்டாம் சந்திப்பின்போதான வசனங்கள் வெகுவாக கவர்ந்தது.

காட்சி.. சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ் சுந்தர சோழரிடம் வந்தியதேவன் அபாயம் என்று கூறும்போது பார்த்திபன் வந்து நிற்கும் காட்சியும், அதனை அபயம் என்று மாற்றி கூறியதும் .. தியேட்டர் முழுக்க சிரிப்பலைதான்..

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் அரண்மனைக்கு வரும் குந்தவைக்கு வரவேற்பு அளிக்கும் காட்சி அற்புதமாக இடம்பெற்றிருந்தது. இந்த முக்கியமான காட்சி ட்ரைலரிலும் இடம்பெற்றிருந்தது.  நந்தினியை நிறுத்தி அவள் வரட்டும் என பெரிய பழுவேட்டரையர் கூறுவதும், நந்தினி தன்னை இறங்கி வந்து வரவேற்காமல், தான் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில், அங்கிருக்கும் குருக்களிடம், “மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று பேச்சுக்கொடுத்து தாமதிப்பதும் ஒரு நல்ல காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களை அந்த காட்சியில் கட்டி இழுத்தது.

ஜெயம்ரவி –கார்த்தி சந்தித்துக் கொள்ளும் காட்சியும் , இவர்தான் அருள்மொழி வர்மன் என அறிமுகமாகும் காட்சியிலும் இருவரின் நடிப்பும் அற்புதமாக இருந்தது. நாவலில் இடம்பெற்ற மிக அருமையான காட்சிகள் இல்லாதது.. கதை பற்றியோ, பொன்னியின் செல்வன் நாவல் பற்றியோ எதுவுமே தெரியாமல் படத்தைப் பார்ப்பவர்களுக்கு கதாபாத்திரங்களில் புரிதலை ஏற்படுத்துவதில் ஒரு நெருடல்இருந்தது. இருந்தாலும் போகப்போக அவர்களும் இந்த கதையை ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பது போல இருந்தது.

கதையைப் படித்துவிட்டுச் சென்றவர்களுக்கு சென்றவர்களுக்கு கதையின் போக்கையும் வசனங்களையும் ரசிக்க முடியாமல் போயிருக்கலாம்.படம் முடியப்போகிறது என்ற எண்ணம் தோன்றும்போது எப்படி கதை முடியப்போகிறது என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. கதை தெரியாதவர்கள் , வந்தியத்தேவன் அருள்மொழி வர்மனை தஞ்சைக்கு அழைத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இரண்டு டிவிஸ்டுகளுடன் படம் நிறைவு பெறும் போது மட்டுமல்ல, இறுதியாக பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு 2023ஆம் ஆண்டு என்ற அறிவிப்பைப் பார்க்கும் போது அவ்வளவு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என மக்களிடையே ஒரு ஏக்கத்தை உருவாக்கியது பொன்னியின் செல்வன் பாகம் 1 !

Next Post

பிரசாந்த் கிஷோரின் அடுத்த அதிரடி..!! 3 ஆயிரம் கி.மீ. நடைபயணம்..!! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

Sun Oct 2 , 2022
காந்தி ஜெயந்தியான இன்று பிரசாந்த கிஷோர் தனது நடைபயணத்தை துவங்கியுள்ளார். வருகிற 2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவை வீழ்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் வியூக நிபுணராக உள்ள பிரசாந்த் கிஷோரை சந்தித்து நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி வியூகம் […]
குஜராத், இமாச்சல் தேர்தலில் இந்த கட்சிதான் வெற்றி பெறும்..!! அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்..!!

You May Like