நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா முன்னாள் காதலரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்துவிட்டதாக இருவரும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சமூக வலைத்தலங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து பல்வேறு வகைகளில் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகின்றது. எதுவும் பலனளிக்காத நிலையில் ஐஸ்வர்யா தனது முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருப்பதாக திரை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஐஸ்வர்யாவின் இந்த புதிய முடிவு குடும்பத்தில் பல வித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்து தனியாக வசித்த வருகின்றார். இவர் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ’’நானே வருவேன்’’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வெளியாகி வெற்றிக்கு பக்கத்தில் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இதனிடையே தனது மகன்களுக்காக அடிக்கடி அவரது பள்ளிக்கு தனுஷ் சென்று வருவதாக தகவல் வந்தது. அப்போது தனுஷுடன் ஐஸ்வர்யா இணைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது. இது குறித்து ஐஸ்வர்யா விரைவில் முடிவை அறிவித்தால் மட்டுமே தகவல் உறுதிப்படுத்தப்படும் எனவும் இல்லைஎனில் வதந்தியாகவே முடிந்துவிடும் என திரை உலகில் பேசப்பட்டு வருகின்றது.