திரைப்படத் தயாரிப்பாளராக அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களது வாழ்வில் புயல் வீசியது போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்தனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறி சுமார் ரூ.16 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து, ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ரவீந்தர் இதுபோல் பல பிரபலங்களை ஏமாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது இது குறித்த சம்பவங்களை மறைத்து தான் மகாலட்சுமியை ரவீந்தர் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஒவ்வொரு விஷயமாக வெளிவரவே, ரவீந்தர் மீது மகாலட்சுமி கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விவகாரத்து செய்யும் முடிவு கூட எடுக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.