ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, திடீரென ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. சமீபத்தில் தான் ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது ரிசர்வ் வங்கி. இந்நிலையில், தற்போது மீண்டும் ஆயிரம் நோட்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரிசர்வ் வங்கிக்கு அப்படியொரு யோசனை இல்லை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.