fbpx

இப்படி ஒரு விசித்திரமா..? தன்னை கடித்த பாம்பை திரும்ப கடித்த ரயில்வே ஊழியர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!! நம்பவே முடியல..!!

பீகார் மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியை உள்ளடக்கிய ரஜௌலி பகுதியில் புதிதாக ரயில்வே இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இருப்புப்பாதை அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் ஊழியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வேலை முடித்துவிட்டு இரவு உணவை சாப்பிட்ட 35 வயதாகும் ரயில்வே ஊழியர் லோகர் என்பவர் தூங்குவதற்காக படுத்த நிலையில், அவரை விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட லோகர், தன்னை கடித்த பாம்பை கையில் பிடித்து இரண்டு முறை அந்த பாம்பையே கடித்துள்ளார். உள்ளூர் பகுதியில் பாம்பு கடித்துவிட்டால், கடித்த பாம்பை பிடித்து இரண்டு முறை பதிலுக்கு கடித்துவிட்டால், அந்த விஷம் நமக்கு ஏறாமல், பாம்பிடமே திருப்பிச் சென்றுவிடும், அதனால் நாம் உயிர் பிழைத்துவிடுவோம் என்று உள்ளூர் வாசிகளால் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

இதனை நினைவில் வைத்து, ஊழியர் லோகரும், தன்னை கடித்த பாம்பை பதிலுக்கு கடித்துள்ளார். ஆனால், இதை பின்பற்றிய லோகரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் விநோதம் அரங்கேறியிருக்கிறது. சக ஊழியர்கள் லோகரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரின் உடலில் விஷம் ஏறாமல் இருந்ததுடன், மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை ஏற்று மறுநாள் காலையிலேயே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், லோகர் கடித்த பாம்பு உயிரிழந்தது.

Read More : தனது காதலியை அறிவித்த முத்தழகு சீரியல் ஹீரோ அஷிஷ் சக்ரவர்த்தி..!! விரைவில் டும் டும் டும்..!!

English Summary

Man bites back snake, reptile dies

Chella

Next Post

பெற்றோர்களே உஷார்… தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி 8 வயது சிறுமி பலி.!! - பகீர் சம்பவம்

Fri Jul 5 , 2024
In Kerala, a 9-year-old girl died of suffocation when she accidentally got stuck in her throat while eating noodles at home.

You May Like