fbpx

Election: தேர்தல் ஆணையர் திடீரென ராஜினாமா…! தள்ளிப் போகிறதா 2024 மக்களவைத் தேர்தல்..?

விரைவில் வருகிறது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..!! எதற்காக..? யாருக்காக தெரியுமா..?

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களவைத் தேர்தல் தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.

ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் அடங்கிய இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் இடம் காலியாக உள்ள நிலையில், நேற்று மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களவைத் தேர்தல் தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தேசிய அளவில் பேச பொருளாக மாறியுள்ளது. அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார், நேற்று முதல் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியவர். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற அவர் 2022 நவம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

AIIMS போல் மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை...! அமைச்சர் உதயநிதி விமர்சனம்...!

Sun Mar 10 , 2024
எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை என அமைச்சர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார் ‌ இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி […]

You May Like