மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், நிதி உதவி குறித்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.. அனைத்து ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் மத்திய அரசு ரூ. 4,78,000 கடன் வழங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் இந்த கடன் தொகையை பெறுவதற்குப் பதிவுசெய்யுமாறும், கடனுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.. ஆனால் இந்த செய்தி போலியானது என்று இந்திய பத்திரிகை தகவல் பணியகமான PIB தெரிவித்துள்ளது… இந்திய நிதி அமைச்சகத்தால் அத்தகைய உதவி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.. PIB-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ அனைத்து ஆதார் அட்டை உரிமையாளர்களுக்கும் மத்திய அரசு ரூ. 4,78,000 கடனாக வழங்குகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்தக் கூற்று போலியானது..
இதுபோன்ற செய்திகளை அனுப்ப வேண்டாம்.. உங்கள் தனிப்பட்ட/நிதி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்..” என்று தெரிவித்துள்ளது.. இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று PIB அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது..
PIB மூலம் செய்திகளை உண்மைச் சரிபார்ப்பது எப்படி..? இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்தி ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம்.. அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். மாற்றாக நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலும் https://pib.gov.in இல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..