fbpx

உடைகிறதா திமுக கூட்டணி..? அடுத்தடுத்து பழி போடும் கூட்டணி கட்சிகள்..!! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழ்நாட்டில் அனுதினமும் தலித் கொடுமைகள் நிகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

சாதிய உணர்வுகளும், சாதிய அணி சேர்க்கையும் கொடி கட்டி பறக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அப்படியென்றால், அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் கைவிடப்பட்டு உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். எனவே, தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கவும், செயல்படுத்தவும் அனைவரும் திரண்டு வரவேண்டுமெனெ கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.

அதிர்ச்சியில் திமுக

கடந்த 2021இல் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதலே, இது திராவிட மாடல் அரசு, பெரியாரின் வழியை பின்பற்றும் அரசு என சூளுரைத்து வருகிறது. ஆனால், ஆணவக் கொலைகள், கொலை, இளைஞர்களிடையே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து, சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் ஓயவில்லை, தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே பேசியுள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது, அரசியல் கட்சி தலைவர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளால், திமுக மற்றும் விசிக கூட்டணியிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டது. அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக 25 தொகுதிகளை கேட்கும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பேசியதும் பேசுபொருளாகியுள்ளது. கூட்டணி கட்சிகளின் இந்த அதிரடி கருத்துகள், திமுகவுக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்து வருகின்றன.

Read More : அசைவ உணவு ஆரோக்கியத்திற்கு கேடு..!! உயிருக்கு ஆப்பு வைக்கும் யூரிக் அமிலம்..? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!

English Summary

Communist Party of India-Marxist State Secretary K. Balakrishnan has expressed his anguish over the atrocities against Dalits that are happening every day in Tamil Nadu.

Chella

Next Post

3 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பும் காதலனுடன் தகாத உறவு..!! இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கணவன்..!!

Tue Dec 24 , 2024
A husband living in Bihar sent his wife, who was in an inappropriate relationship with her lover, away with her lover.

You May Like