fbpx

கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..

கண்ணில் மை இடும் பழக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை கண் மை இட்டுக்கொள்கின்றனர். முன்பு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கடைகளில் பல வகைகளிலும் வெவ்வேறு நிறங்களிலும் கண் மைகள் கிடைக்கின்றன.  வேதிப்பொருட்கள் நிறைந்த ஒப்பனைப் பொருட்கள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரால் பயன்படுதப்படும் கண் மை ஆபத்தானதா? அதைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி, சமூக ஊடக பக்கங்களில் வைரல் ஆனது. அதில் தொடர்ச்சியாக கண் மை பயன்படுத்துவது ஆபத்தானது என்று கண் மருத்துவர் அஷ்வின் அகர்வால் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து கண் மருத்துவர் வஹீதா நசீரிடம் கேட்டபோது, “உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் மென்மையானவை மற்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அதில் தூசி போன்றவை படியும்போது கண் எரிச்சல், கண் கட்டி போன்றவை ஏற்படலாம்,” என்று கூறுகிறார்.

கண்ணின் விளிம்புகளில் லாக்ரீமல் சுரப்பிகள், மெய்போமியன் சுரப்பிகள் போன்றவை இருக்கின்றன. இவைதான் கண்ணீர் சுரப்பதற்கும், எண்ணெய் போன்றவற்றைச் சுரந்து கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதைத் தவிர்க்கவும் செய்கிறது. கண்ணின் வாட்டர்லைனில் மை இடுவதால், அங்குள்ள நுண்ணிய துளைகளில் (pores) அடைப்பு ஏற்படும். இதனால் கண்ணில் சுரக்கப்படும் திரவியங்கள் வெளியேற வழி இல்லாமல் உள்ளேயே இருந்து, அது கட்டி போல உருவாகக்கூடும். இந்த பாதிப்பிற்கு கேலேசியான் (chalazion) என்று பெயர்” என்றார்.

பாதிப்புகள்

கண்களை அலங்கரிக்க கண் மை, ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷாடோ போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக கண்களின் உள்ளே பயன்படுத்தும்போது, கஞ்சக்டிவைடிஸ் எனப்படும் கண் எரிச்சல், ஸ்டை எனப்படும் கண் கட்டிகள் ஏற்படலாம்.

கண்ணில் வரும் இந்தக் கட்டிகள், இமையின் உள்பகுதியிலும் வெளிப்புறத்திலும் தோன்றலாம். இதனால் பார்வைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு விழிகளில் இந்தப் பாதிப்பு பரவி கண் பார்வையில் பிரச்னைகள் ஏற்படலாம். பாதிப்பு தீவிரமாக இருப்பின், அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்ற வேண்டும்.

கண்களை பாதுகாப்பது எப்படி?

  • முதலில் கண்களில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கண்களில் வேதிப் பொருட்கள் கொண்ட ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஒருவேளை பயன்படுத்தினாலும் தேவை முடிந்தவுடன் கண் இமை, இமையிலுள்ள முடி போன்ற கண்ணின் எல்லா பகுதிகளிலும் சரியான முறையில் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும்.
  • ஒருவர் பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களை வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. சோப், ஃபேஸ்வாஷ் போன்றவை கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • கண்களுக்கு உள்ளே அல்லது அதைச் சுற்றி கட்டி ஏற்பட்டால் நாமக்கட்டி, சந்தனம், விளக்கெண்ணை போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது.
  • கண் சிவப்பாகவோ அல்லது அதில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

Read more ; அடிதூள்.. வாட்ஸ் அப்பில் பல குரல் அம்சங்களை அறிமுகப் படுத்துகிறது Meta AI..!!

English Summary

Is the eyelash used by many people from children to adults dangerous? In this post, we will see what kind of effects will be caused by using it.

Next Post

BREAKING | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Fri Sep 13 , 2024
Supreme Court granted bail to Delhi Chief Minister Arvind Kejriwal.

You May Like