ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வரும் வி.ஜே. மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடியைப் பற்றி சில தகவல்கள் பரபரப்பரப்பாக பேசப்பட்டு வரகின்றன.உண்மையாகவும் இருக்கலாம் என்ற வகையில்தான் பேச்சு அடிபடகின்றது.
வி.ஜே.மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் இருவரும் திருப்பதியில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். வரவேற்பும் அதே சமயத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர். இவர்கள் திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ஆயிரம் விமர்சனங்களையும் தாண்டி தினமும் செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர்.இதனிடையே விஜய் டி.வியில் வந்தால் மகாலட்சுமியே என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.இது ஆயுதபூஜை அன்று வெளியாகும் என புரோமோ வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரவீந்தர் பிக்காஸ் நிழ்ச்சிகளை ரிவியூ செய்து கொண்டிருந்ததாகவும் தற்போது வெளியாக உள்ள பிக்பாஸ் சீசன் 6 ல் இவர்கள் இரண்டுபேரின் பெயர்களுமே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அக்டோபர் 9 முதல் பிக்பாஸ் ஒளிபரப்பாகின்றது. போட்டியாளர்கள் பட்டியலில் இவர்கள் இடம்பிடித்திருப்பது அடுத்தக்கட்ட ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ரவீந்தர் பதில் அளித்ததாக தகவல்கள் வருகின்றன. அவர் ’’ மகாலட்சுமிக்கு தல தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது ஆசை, அதற்காக தான் செப்டம்பர் மாதத்தில் திருமணம் செய்தோம் என ரவீந்தர் கூறி இருந்தார். ஒருவேளை ரவீந்தர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விட்டால் மகாலட்சுமி தல தீபாவளி ஆசை நிறைவேறாமல் போகவும் வாய்ப்பு அதிகம்’’ இப்படியும் பேச்சு அடிபடுகின்றது. எனவே ரவீந்தர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வாரா? இல்லையா என்பது அக்டோபர் 9 அன்று உறுதியாக தெரிந்து விடும்.