fbpx

வெடி வைத்து தகர்க்கப்படுகிறதா நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம்..? மின்னஞ்சலில் மிரட்டல்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளளது. இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். 1,32,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் உள்ள இந்த மைதானத்தில், அக்.14ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன் 2023 ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நவ.19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டி நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தை வெடி வைத்து தாக்கப்போவதாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தொலைபேசியில் இருந்து இந்த மின்னஞ்சல் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த தொலைபேசி எண்ணுக்குரியவரை பிடித்து விசாரித்த போது, அவர் தான் இந்த மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், தற்போது ராஜ்கோட்டின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் மீது வேறு எந்த குற்றப்பின்னணி வழக்கும் இல்லை என்ற தெரிவித்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது குஜராத் காவல்துறை, என்எஸ்ஜி, ஆர்ஏஎஃப் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இப்படியுமா ரீல்ஸ் எடுப்பீங்க..!! மெட்ரோ ரயிலில் நடந்த அசிங்கம்..!! வைரல் வீடியோ..!!

Wed Oct 11 , 2023
சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், பல பயனர்கள் தங்கள் திறமைகள், தயாரிப்புகள் அல்லது வணிகங்களை விளம்பரப்படுத்த தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், எல்லோரும் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதில்லை. சில நபர்கள் பார்வைகளையும், விருப்பங்களையும் சேகரிக்க மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ரீல்ஸ் உருவாக்கம் என்பது பலரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பொது இடங்கள் முதல் திரையரங்குகள் வரை, சமூக ஊடகங்கள் நடனம், மாடலிங் அல்லது வேறு எந்த வகை […]

You May Like