தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவை பொறுத்தவரை பெண்களின் வாக்குகளே பலமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான், மகளிர், பெண் பிள்ளைகளுக்கும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண்களின் ஓட்டுகளை பெற தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. ஏழை பெண்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு, மூவலுார் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கியது. பட்டம் பெற்ற மணமகளுக்கு ரூ.50 ஆயிரமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான், மீண்டும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் குறித்த பேச்சு அடிபட்டு வருகிறது. தங்கத்தின் தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரங்களால், தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72,000-ஐ எட்டியுள்ளது. இதனால், ஏழை மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் தான், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறதாம்.
திமுகவை பொறுத்தவரை பெண்களின் வாக்குகளே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால்தான், பல்வேறு திட்டங்களை பெண்களை மையப்படுத்தியே வெளியிட்டு வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெண்களின் ஓட்டுகளை பெற தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே, மாதம், 1,000 ரூபாய் பெறாத கல்லூரி மாணவியரை உள்ளடக்கிய, அனைத்து ஏழை பெண்களும் பயன்பெறும் வகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : கொங்கு மண்டலம் கோவையில் தவெக தலைவர் விஜய்..!! பிரம்மாண்ட Road Show..!! கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம்..!!