fbpx

சிலிண்டர் விலை குறைகிறதா..? நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்..!! மக்களே ரெடியா..?

இன்றுடன் ஜூன் மாதம் முடிகிறது. நாளை ஜூலை துவங்க இருக்கிறது. மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நாளை முதல், 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. இதில் முக்கியமானது, சமையல் கேஸ் விலை.

எல்பிஜி சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் அரசு எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த முறை வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது. எனவே, எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. மேலும், எல்பிஜி எரிவாயு விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.. எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலை உயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.. முதலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டால், மத்திய அரசும் தன் சார்பாக அந்த விலை உயர்வை குறைக்கவே செய்யும்.

அதிலும், இந்த முறை நிறையவே விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. அதனால், மக்களுக்கு சில சலுகைகளை தர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறதாம். மேலும், எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பையும் சர்ப்ரைஸாக அளிக்கலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, எல்பிஜி சிலிண்டர் விலையிலும், கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் வர இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையில் ஏற்படும் மாற்றங்கள் மாதத்தின் முதல் தேதி அல்லது எல்பிஜி போன்ற முதல் வாரத்தில் காணப்படுகின்றன. டெல்லி, மும்பை போன்ற பிற நகரங்களில், எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிஎன்ஜி-பிஎன்ஜி விகிதத்தை மாற்றுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், ஜூலை மாதத்தில் விலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு செலவுகளுக்கு ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு முதல் சிஎஸ் கட்டணத்தை விதிக்கும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2023 முதல் வெளிநாட்டில் உள்ள கிரெடிட் கார்டு செலவுகளுக்கு TCS கட்டணத்தை விதிக்கும் ஏற்பாடாக இருக்கலாம். எனவே, உங்கள் செலவு 7 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் 20 சதவீத டிசிஎஸ் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான செலவினங்களில் 5 சதவீதமாக குறைக்கப்படும். ஆனால், வெளிநாட்டில் கல்விக்காக கடன் பெற்ற வரி செலுத்துவோர் 7 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் 0.5 சதவீத டிசிஎஸ் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அடுத்ததாக வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு. வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதம் நெருங்குகிறது. உங்கள் ஐடிஆரை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜூலை 31ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

Chella

Next Post

தமிழக மக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..! இனி இந்த கோவில் பிரசாதமும் உங்க வீடு தேடி வருமாம்…..!

Fri Jun 30 , 2023
தமிழ்நாட்டில் சில சமயங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள் பலரும் தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டே கோவில் பிரசாதங்களை பெற்று வருகிறார்கள். அதன் அடிப்படையில், தற்போது வரையில் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவில் பிரசாதமும் பக்தர்களின் வீட்டிற்கு தபால் மூலமாக […]

You May Like