fbpx

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தடையா..? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி, அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கும் திட்டத்திற்கு எதிராக கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். இதனால், இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதனை தொடர்ந்து, அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்..? மிக கனமழை பெய்யும்..!! வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!

Tue Nov 28 , 2023
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால், அக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை கிடைக்கவில்லை. பருவமழை அளவு பற்றாக்குறையாகவே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் ஓரளவுக்கு நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு […]

You May Like