fbpx

கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பா..? ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

PLOS இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் (கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்) மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2021 மற்றும் ஆகஸ்ட் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் டெல்லியின் கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,578 பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த ஆய்வு பயன்படுத்தியது.

கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனையுடன் இணைந்த மற்றும் ஆய்வுக்கு தலைமை தாங்கிய மோஹித் குப்தா பிடிஐயிடம் கூறுகையில், ‘இந்தியாவில் தடுப்பூசிகளின் பயன்பாடு பாதுகாப்பானது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இந்தியாவில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

உண்மையில், தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாரடைப்பிற்குப் பிறகு இறப்பது குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Chella

Next Post

’உங்கள் வீட்டில் இந்த கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா’..? ’உடனே மாத்திருங்க’..!! திடீரென வெளியான அறிவிப்பு..!!

Tue Sep 5 , 2023
இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு அதிரடிகளை அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், ஒரே மாதத்தில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு, நுகர்வோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. முதலாவதாக, 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த அயர்ன் பாக்ஸ்கள், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம். வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த அயர்ன்பாக்ஸை பயன்படுத்த முடியும். […]

You May Like