இந்தியாவில் யுபிஐ வழியாக ரூ.2,000-க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தற்போது அறிவித்துள்ளது.
அதாவது வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசமாக வழங்கப்படும் எனவும், கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தேசிய பரிவர்த்தனை கழகம் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது பேடிஎம் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.