fbpx

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? – மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மத்திய-மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய-மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம், “மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்ப பெறுவது போல பிளாஸ்டிக் பாட்டில்களையும் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு கொண்டு வந்தால் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஆலோசனைகளை உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ் துறை மூலம் வழங்கலாமே? பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் மாற்று பொருட்களை பயன்படுத்தும்படி அவர்களுக்கு அறிவுரை வழங்கலாமே? தமிழ்நாட்டில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

அதற்கு, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இதேபோல மத்திய அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் மட்டும் தான் அமலில் உள்ளதே தவிர, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான விதிகள் ஏதும் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை யார் உறுதி செய்வார்கள்? அதற்கு யார் பொறுப்பான அதிகாரி?” என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பினர்.

பின்னர், “பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் திட்டம் உள்ளதா? இல்லையா? அல்லது உற்பத்தியை அனுமதித்து, அதை புழக்கத்தில் விட்டபிறகு மேலாண்மை செய்வதற்கு மட்டும் திட்டம் உள்ளதா? என்பதை மத்திய-மாநில அரசுகள் 2 வாரங்களில் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Chella

Next Post

Battlegrounds Mobile India கேம் கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கம்.. ஏன் தெரியுமா..?

Fri Jul 29 , 2022
BGMI என அழைக்கப்படும் Battlegrounds Mobile India, Google Play Store மற்றும் Apple App Store ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டது.. Battlegrounds Mobile India (BGMI) என்பது PUBG மொபைலின் இந்தியப் பதிப்பாகும், 2021 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக கேம் வெளியிடப்பட்டது, மேலும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன ஆப்ஸுடன் PUBG […]

You May Like