போலீஸ் நாய் போல், போலீஸ் பூனைகள் உள்ளதா என்ற தனது மகன் கேட்ட கேள்வி குறித்த எலான் மஸ்க் பதிவிட்டிருந்த ட்வீட்க்கு டெல்லி காவல்துறை ஜாலியாக பதிலளித்துள்ளது.
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது மகன் லில் எக்ஸ் என்னிடம், போலீஸ் நாய்களை பார்த்த பிறகு, போலீஸ் பூனைகளும் உள்ளதா என கேட்டார்?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு டெல்லி போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து எலான் மஸ்கின் ட்வீட்டை குறிப்பிட்டு, ”எலான் மஸ்க் உங்கள் மகனிடம் கூறுங்கள்… போலீஸ் பூனைகள் கிடையாது ஏனென்றால் அவை செய்த குற்றத்துக்காக, அவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்” என்று பதிலளித்தது. இந்தப் பதிவில் ஆங்கில வார்த்தைகளை லாவகமாக டெல்லி போலீஸார் பயன்படுத்தி இருந்தனர். இதனால் இந்த ட்வீட் வைரலானது.
இந்த பதிவு ஒரு மணி நேரத்தில் 1000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் ஏராளமானோருக்கு பகிரப்பட்டும், கமெண்டுக்களை குவித்து வருகிறது. டெல்லி போலீஸார் விழிப்புணர்வு செய்திகளை சுவாரசியமாக வழங்குவதில் சமீப நாட்களாகவே நெட்டிசன்களின் பிரபலமாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.