சென்னையில் பல பெட்ரோல் பங்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்பையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது.. அந்த வகையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது..
இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.. பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை ஆகியவை காரணமாக டீசல் தட்டுப்பாடு இருக்கலாம் என்றும் தெரிகிறது..