ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. செல்போன் நம்பர் வாங்குவதில் இருந்து வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறவும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் முக்கியமாக தேவைப்படுகிறது. அதேபோல், பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது, ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது போன்ற பணிகளையும் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், சிலருக்கு ஆதார் தயாரிக்கும் போதே அதில், சில தவறுகள் நடந்திருக்கக் கூடும். ஆதார் அட்டையில் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி தவறாக அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இந்த தவறுகளை திருத்த வேண்டியதும் அவசியம். அந்த வகையில், ஆதாரில் இடம்பெற்றிருக்கும் தகவல்களில் எதையெல்லாம் மாற்ற முடியும், எதையெல்லாம் மாற்ற முடியாது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அதன்படி,
உங்கள் பெயரில் ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால், அதை ஆன்லைனில் மூலம் மாற்றிக் கொள்ள முடியும். பிறந்த தேதி தவறாக இருந்தாலும் அதை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், ஒருமுறை மட்டுமே புதுப்பிக்க முடியும். அதேபோல், உங்கள் பாலினம், முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களையும் ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி..?
* முதலில் UIDAI என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்டு செய்து உள்நுழைய வேண்டும்.
* இப்போது ஆதார் ஆன்லைனில் அப்டேட் செய்யும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதில், நீங்கள் புதுப்பிக்க விரும்பும் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அதை மாற்றிய பிறகு, புதுப்பிப்பு கோரிக்கைக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* இறுதியாக புதுப்பிப்பு கோரிக்கையை சமர்பித்தப் பிறகு எஸ்.எம்.எஸ்.மூலம் புதுப்பிப்பு கோரிக்கைக்கான எண்ணை பெறுவீர்கள்.
பயோமெட்ரிக் தகவலைப் புதுப்பிக்க ஆதார் மையத்திற்கு செல்லவும்..
ஆதாரில் தனி நபர் தகவல் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என இரண்டு வகையான உள்ளன. பெயர், முகவரி போன்ற விவரங்களை ஆன்லைனில் மாற்ற முடிந்தாலும், கைரேகை, கண்களின் கருவிழி ஸ்கேன் மற்றும் உங்கள் முகத்தின் புகைப்படத்தை மாற்ற வேண்டுமென்றால், நீங்கள் ஆதார் மையத்திற்குத்தான் செல்ல வேண்டும். அதேபோல், முழுப் பெயரையும் மாற்ற விரும்பினால், ஆதார் மையத்திற்குச் சென்று தான் மாற்ற முடியும். ஆதாரை ஆன்லைனில் புதுப்பிக்க 5 முதல் 7 நாட்களும், ஆஃப்லைனில் புதுப்பிக்க 10 முதல் 15 நாட்களும் ஆகும்.
Read More : ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கு!. முன்னாள் அதிமுக அமைச்சரின் உறவினர் கைது!. சிபிஐ அதிகாரிகள் அதிரடி!