மாணவிகள் காப்பி அடிக்கிறார்களா..? பிட் ஏதேனும் வைத்திருக்கிறார்களா..? என சோதனை செய்வதுபோல், 6 மாணவர்களிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. நேற்றைய தினம் இறுதி தேர்வு நடந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஏராளமான மாணவ – மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வை அதே பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகளும், தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவிகளும் எழுதியுள்ளனர்.
அப்போது, ஒரு வகுப்பறையில் 6 மாணவிகள், 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் தேர்வினை எழுதிக் கொண்டிருந்தனர். அந்த அறையின் கண்காணிப்பாளராக தனியார் பள்ளியின் ஆசிரியர் சம்பத்குமார் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர், மாணவிகள் காப்பி அடிக்கிறார்களா..? பிட் ஏதேனும் வைத்திருக்கிறார்களா..? என சோதனை செய்வதுபோல், 6 மாணவர்களிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், மாணவிகள் பொதுத்தேர்வு என்பதால் அமைதியாக தேர்வில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளனர். பின்னர், தேர்வு எழுதி முடித்ததும், அவசர அவசரமாக தேர்வு அறையை விட்டு வெளியேறிய மாணவிகள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் பள்ளி முதல்வரிடம் நடந்தவற்றை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் சம்பத்குமாரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஷாக்..!! சம்பள தேதியில் வந்த அதிரடி மாற்றம்..!! வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!