fbpx

பேரிக்காயில் இவ்வளவு மகத்துவம் உள்ளதா?… மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்

பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன.இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் எலும்பு வலிமை பெறவும் பேரிக்காய் சிறந்த மருந்து. பேரிக்காயை காலையிலும் மாலையிலும் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

அன்றாட வாழ்வை பாதிக்கக்கூடியது நீரிழிவு நோய். உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றலாம். இயற்கை உணவுகளின் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை பேரிக்காய்க்கு உண்டு. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிக்காயை சாப்பிடுவதால் உடல் எடையும் குறைகிறது. பேரிக்காயின் மேலும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.பேரிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.பேரிக்காய் பழங்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது .

இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை வலுவடைய, நல்ல ஆற்றல் தருகிறது பேரிக்காய். இதை அடிக்கடி சாப்பிட்டால் நல்ல பசியும் எடுக்கும். செரிமானமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும் பேரிக்காய்க்கு உண்டு. தீடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல தீர்வுக் காண முடியும்.

Kokila

Next Post

பெண்களின் வலி போக்கும் பிரண்டை!... பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Mon Feb 20 , 2023
பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. மேலும், இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம் உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து […]

You May Like