fbpx

ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா இந்த வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான ஆவணமாகும். தற்போது பல அரசுப் பணிகளிலும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI மூலம் வழங்கப்படுகிறது. வாடகை வீட்டில் வசிப்பவர்கள், அல்லது அவ்வப்போது இடமாற்றம் செய்பவர்கள், அடிக்கடி ஆதார் அட்டையில் உள்ள முகவரியை பலமுறை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இப்போது குடும்பத் தலைவர் மிக எளிதாக செய்து முடிக்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல், ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றிக் கொள்ளலாம். புதிய விதிகளின்படி, ஒருவர் குடும்பத் தலைவரின் (HOF) ஒப்புதலுடன் ‘My Aadhaar’ போர்ட்டலில் தனது முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.

குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. குடிமக்களின் பெற்றோரின் பெயர், கணவன் அல்லது மனைவி பெயர் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு இது வசதியாக இருக்கும். ஆதாரில் ஆன்லைனில் குடும்பத் தலைவரின் பெயரை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி இங்கே காணலாம்.

* முதலில் https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

* அங்கு அப்டேட் அட்ரஸ் டேபுக்குச் செல்லவும்.

* இப்போது குடும்பத் தலைவரின் செல்லுபடியாகும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

* குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணைச் சரிபார்த்த பிறகு தேவைப்படும் சான்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* வெற்றிகரமான ரூ. 50 பரிவர்த்தனைக்குப் பிறகு, உங்களுக்கு சேவைக் கோரிக்கை எண் அனுப்பப்படும். மேலும், குடும்பத் தலைவர் முகவரிக் கோரிக்கை பற்றிய அலர்டை SMS மூலம் பெறுவார்.

* அலர்ட் கிடைத்த 30 நாட்களுக்குள் மை ஆதார் போர்ட்டலில் சைன் இன் செய்து கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால், கோரிக்கை செயல்படுத்தப்படும்.

Read More : ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் இருப்பது ஏன் தெரியுமா..? இதனால் என்ன பயன்..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

Aadhaar card is an important document in India. Aadhaar card is now mandatory for many government jobs.

Chella

Next Post

2000 ஆண்டுகள்..!! மழைக்காடுகளால் மறைக்கப்பட்ட நகரம்..!! வியக்க வைக்கும் பாரம்பரியம்..!!

Thu Oct 17 , 2024
Archaeologists have discovered an ancient Mayan city in the United States.

You May Like