இன்றைய காலகட்டத்தில் அன்றாட பொருட்கள் வாங்குவது முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்தையும் கையில் இருக்கும் ஒரு செல்போன் மூலம் இணையதளத்திலேயே மக்கள் முடித்து விடுகிறார்கள். இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் கேஸ் முன்பதிவு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி Indane, Bharth petroleum, HP GAS வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலமாக கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
Indane கேஸ் வாடிக்கையாளர்கள் செல்போனில் 75888 88824 என்ற நம்பரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாட்ஸ் அப்பில் அந்த எண்ணுக்கு Book அல்லது Refill என டைப் செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் கேஸ் சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும். இதேபோன்று HP கேஸ் வாடிக்கையாளர்கள் 92222 01122 என்ற நம்பரை சேமித்து வைத்துக் கொண்டு Book அல்லது Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு கேஸ் சிலிண்டர் புக்கிங் ஆகிவிடும். இதே போன்று பாரத் பெட்ரோலியம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய 18002 24344 என்ற எண்ணிற்கு Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும்.