தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இப்படத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, காலை 9 மணிக்கு பின்னர் தான் திரையரங்குகளில் காட்சிகளை தொடங்க வேண்டும் என்றும் இரவு 1.30 மணிக்குள்ளாக காட்சிகளை முடித்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மதுரையில் உள்ள (கோபுரம் சினிமாஸ்) திரையரங்கில் இன்று மதியம் 12 மணிக்கு துவங்கியது. இந்த திரையரங்கில் மொத்தம் 3 ஸ்கிரீன்கலில் முதல் நாள் மொத்தம் 12 காட்சிகள் திரையிடப்பட்ட உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்ய துவங்கிய 5 நிமிடங்களிலேயே முழுவதுமாக விற்றுத் தீர்ந்து விட்டது.